மதுரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு இல்லை

மதுரையில் நேற்று புதிதாக 120 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று உயிரிழப்பு பதிவாக வில்லை.;

Update:2021-06-23 21:15 IST
மதுரை,ஜூன்
மதுரையில் நேற்று புதிதாக 120 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று உயிரிழப்பு பதிவாக வில்லை.
பாதிப்பு குறைகிறது
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரையில் நேற்று புதிதாக 120 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 684 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் நேற்று மேலும் 155 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் நோயில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 957 ஆக உள்ளது.
உயிரிழப்பு
இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று மதுரையில் நோய் தோற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து 652ஆக இருக்கிறது.
 இவர்களில் பெரும்பாலானோர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர்களும் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்