கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்

மதுரையில் கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்;

Update:2021-06-24 00:14 IST
மதுரை, ஜூன்
மதுரை அண்ணாநகர் போலீசார் வண்டியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் யாகப்பா நகரை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 22), அருண்பாண்டியன், சேதுபதி என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று எஸ்.எஸ்.காலனி போலீசார் எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் கஞ்சா விற்ற கோச்சடையை சேர்ந்த தர்ஷன் (21) ஆனையூர் ஜோயல்ராஜ் (26) ஆகியோரை கைது செய்தனர். தெற்குவாசல் போலீசார் தெற்குமாரட்வீதியில் கஞ்சா விற்ற விஜயராஜன் (37) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்