வீடு புகுந்து திருட்டு

என்ஜினீயரின் வீட்டுக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2021-06-24 00:48 IST
மதுரை, ஜூன்.
மதுரை எஸ்.எஸ்.காலனி, ஜவகர் தெருவை சேர்ந்தவர் விஜய் சந்திரன் (வயது 43), என்ஜினீயர். இவர் வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த தங்க வளையல், தங்க மோதிரம் ஆகியவற்றை திருடி விட்டு, வீட்டின் கதவை பூட்டி விட்டு தப்பி விட்டனர். இது குறித்து விஜய்சந்திரன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்