தொழிலாளியை வாளால் வெட்டியவர் கைது

தொழிலாளியை வாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-06-27 01:01 IST
திருப்புவனம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி அய்யப்பன் (வயது 33). இவர் கடந்த 8-ந் தேதி திருப்பாச்சேத்தி போலீஸ் சரகம் கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ெதாழிலாளியான சரவணனை மீனாட்சிபுரம்-மேலவெள்ளுர் சாலையில் வழிமறித்து வாளால் வெட்டியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணி அய்யப்பனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருப்புவனம் அருகே உள்ள டி.பாப்பாங்குளம் விலக்கு அருகே பதுங்கி இருந்த மணி அய்யப்பனை இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதானவர் மீது சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 38 வழக்குகள் உள்ளன. அவரிடமிருந்து வாள், இருசக்கர வாகனம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்