மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்;
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டில் ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் மற்றும் நண்பர்கள் சார்பில் மதுரை புறநகர் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி ஆகியோர் உத்தரவின்பேரில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்ட நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆஸ்டின்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமியப்பன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.