பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காஞ்சீபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update:2021-06-30 11:45 IST
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இரணியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் முத்துக்குமார், கே.நேரு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கமலநாதன், மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாதாசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கு.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்