பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.;
மதுரை, ஜூலை
பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருகிற 6 மாத காலத்திற்கு மாதம் ரூ.7500 வழங்கிட வேண்டும் என்று கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சி.பி.ஐ. (எம்.எல்), அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்.யூ.சி.ஐ., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மாநகர் பகுதிகளில் 21 இடங்களில் ௧ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழங்காநத்தம் பகுதியில் உழவர் சந்தை எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பகுதி குழுச் செயலாளர் இளங்கோவன் தலைமையிலும், சுந்தராஜபுரம் மார்க்கெட் அருகில் பகுதிக் குழு உறுப்பினர் எஸ்.என். நவாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசரடி பகுதிக் குழு சார்பில் பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பகுதி குழு உறுப்பினர் சங்கிலி பாண்டி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து அப்பகுதியில் உள்ள தெருக்கள் முழுவதும் சுற்றி வந்தும் பின்னர் விறகு அடுப்பில் சமையல் செய்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரப்பாளையம் ஏ.ஏ. ரோட்டில் பகுதிக் குழு உறுப்பினர் சாலமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் நூதன முறையில் இருசக்கர வாகனம் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.