நம்பியூர் அருகே தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி மாணவி சாவு; ஊஞ்சல் விளையாடியபோது பரிதாபம்
நம்பியூர் அருகே ஊஞ்சல் விளையாடியபோது தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி மாணவி பரிதாபமாக இறந்தார்.;
நம்பியூர்
நம்பியூர் அருகே ஊஞ்சல் விளையாடியபோது தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி மாணவி பரிதாபமாக இறந்தார்.
மாணவி
நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேடு காளியம்மன் நகரைச் சேர்ந்தவர் திருவேங்கடம். இவர் குருமந்தூர் பகுதியில் ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ஸ்ரீவர்ஷினி (வயது 14). மகன் ஸ்ரீ விபிஷன் (10).
இதில் ஸ்ரீவர்ஷினி குருமந்தூர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் திருவேங்கடமும், ஸ்ரீவிபிஷனும் வேலை விஷயமாக அருகே உள்ள அளுக்குளி சென்றுவிட்டனர். வீட்டில் ஸ்ரீவர்ஷினியும், அவருடைய தாயும் இருந்துள்ளனர்.
தொட்டில் சேலை இறுக்கி சாவு
இந்த நிலையில் மாலை ஸ்ரீவர்ஷினி வீட்டின் பின்புறம் உள்ள அறையின் உத்திரத்தில் கயிற்றில் தொட்டில் சேலையை கட்டி ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தார். அப்போது சேலை அவரது கழுத்தை சுற்றி இறுக்கியது.
இதில் ஸ்ரீவர்ஷினி மயக்கமடைந்தார். இதை பார்த்த அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீவர்ஷினியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீவர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.