கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

Update: 2021-07-01 15:53 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், மாவட்டத்தில் அனைத்து கோவில்களும் கடந்த திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உத்தரவின் பேரில், பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஏற்பாட்டின்படி காஞ்சீபுரம் கச்சப்பேஸ்வரர் கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் காஞ்சீபுரம் நகர திருக்கோவில் பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

நிகழ்ச்சியில் காஞசீபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ஜெயா, கோவில் செயல் அலுவலர்கள் குமரன், பூவழகி, பரந்தாமகண்ணன், ஆய்வாளர்கள் பிரித்திகா, சுரேஷ்குமார், டாக்டர் சரஸ்வதி, நகர் நல அலுவலர் டாக்டர் முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்