2¾ லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்
மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.2¾ லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.;
மேலூர்,ஜூலை
மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் மறைமுக ஏலம் மதுரை விற்பனைக்குழு செயலாளர் மெர்சிஜெயராணி தலைமையில் நடைபெற்றது. மேற்பார்வையாளர் மா.கருப்பையா ஏலத்தை பற்றி விளக்கினார். ஏலத்திற்கு மொத்தம் 35 ஆயிரத்து 750 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 6 விவசாயிகள் மற்றும் 5 வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதிகபட்ச விலையாக ரூ.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.9.09-க்கும் தேங்காய்கள் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 613-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.