அலங்காநல்லூர்,ஜூலை.
மதுரை பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி பகுதியில் நேற்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் மதுரை மேலமடையைச் சேர்ந்த சிவக்குமார் (வயது21) என்பதும், ஆடு திருடியவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 3 திருட்டு ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தார். மேலும் அவருடன் வந்த 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.