காஞ்சீபுரம் கோவில் குளத்தில் ஆண் பிணம்
காஞ்சீபுரம் தாயார் அம்மன் கோவில் குளத்தில் ஆண் பிணம் கிடந்தது.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் தாயார் அம்மன் கோவில் குளத்தில் 38 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து காஞ்சீபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலாஜி காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.