உசிலம்பட்டி
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் இயற்கை பாதுகாப்பு குழுமத்தின் பத்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் இயற்கை அன்னை சிலை திறப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரவி தலைமை தாங்கினார். தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி தாளாளர் வாலாந்தூர் பாண்டியன் சிலையை திறந்து வைத்தார். விழாவில் இயற்கை வள பயிற்றுனர் சினேக் ரமேஷ், நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை நிறுவனர் தெய்வேந்திரன், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.