ஹெராயின் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ஹெராயின் கடத்திய வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2021-07-08 16:57 GMT
மதுரை,ஜூலை
ஹெராயின் கடத்திய வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கன்னியாகுமரிக்கு கடத்தல்
கடந்த 2008-ம் ஆண்டு கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது 2 பேர் தப்பி விட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவர், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தயாராம் என்பதும், மத்திய பிரதேசத்தில் இருந்து ஒரு கிலோ ஹெராயின் போதைப்பொருளை சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இங்கிருந்து இலங்கைக்கு அந்த போதை பொருளை கடத்தி செல்வதற்கு கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடியை சேர்ந்த ரொனால்டோ சதீஷ் தயாராக இருந்துள்ளார்.
பின்னர் தயாராமை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஒரு கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாராமுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கில் 2-வது குற்றவாளியான ரொனால்டோ சதீஷ் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புளோரா நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்