காஞ்சீபுரத்தில் பேராசிரியை மர்மச்சாவு

காஞ்சீபுரத்தில் தனியார் கல்லூரி பேராசிரியை மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update:2021-07-11 07:47 IST
கல்லூரி பேராசிரியை
காஞ்சீபுரம் ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி நகரை சேர்ந்தவர் அனிதா (வயது 45), இவர் காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டின் மேல்தளத்தில் உள்ள அவரது அறைக்கு சென்று விட்டார். வீட்டின் கீழ் தளத்தில் அனிதாவின் அக்காள் சண்முக கனி, அக்காவின் கணவர் வெள்ளைச்சாமி வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் திடீரென இரவு 11 மணியளவில் மாடியில் இருந்து சத்தம் கேட்கவே வெள்ளைச்சாமி, விரைந்து சென்று வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

மர்மச்சாவு
நீண்ட நேரமாகியும் அனிதா கதவை திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் அவர் உதட்டில் ரத்தகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அனிதாவை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அனிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.னிதாவின் மர்மச்சாவு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மேற்பார்வையில், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், கங்காதரன் மற்றும் போலீசார் 
வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது எவ்வாறு இறந்தார் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்