குன்றத்தூர் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலா (45), நேற்று முன்தினம் அருகில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.;

Update:2021-07-11 09:10 IST
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கமலா அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது ஒரு பகுதி தங்கச்சங்கிலி அவரது கையில் சென்றது. இதுகுறித்து கமலா அளித்த புகாரின்பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் மணப்பாக்கத்தை சேர்ந்த வினோத்குமார் (30), என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

அவர் நகை பறிப்பில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவரிடம் இருந்து ஒரு பவுன் தங்கச்சங்கிலியை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்