காஞ்சீபுரத்தில் வீட்டில் பதுக்கிய 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது

காஞ்சீபுரம் வெள்ளகுள தென்கரை பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் பிரியாவுக்கு தகவல் கிடைத்தது.;

Update:2021-07-11 09:15 IST
அதன் அடிப்படையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென அவரது வீட்டில் வட்ட வழங்கல் அலுவலர் பிரியா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீட்டில் சிறு கோணிப்பைகளில் 1½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரது வீட்டின் அருகில் இருக்கும் ரேஷன் கடைகளில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு இருப்பு நிலை மற்றும் விற்பனை முறைகளை ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்