கிணற்றில் தவறிவிழுந்து மாணவர் பலி

கிணற்றில் தவறிவிழுந்து மாணவர் பலி;

Update:2021-07-12 00:58 IST
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே கட்டக்குளத்தில் நேற்று சிலர் கிணற்றில் குளித்து கொண்டிருந்தனர். அதில் சோழவந்தான் பேட்டையை சேர்ந்த அய்யனார் மகன் ஆகாஷ்(வயது 20) என்பவரும் குளித்தார். அப்போது கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்தார். உடன் குளித்தவர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி தகவலறிந்த வாடிப்பட்டி தீயணைப்புத்துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆகாசை பிணமாக மீட்டனர். இதுசம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஆகாஷ் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

மேலும் செய்திகள்