மறைமலைநகரில் பஸ் மோதி பெட்ரோல் நிலைய பெண் ஊழியர் பலி

மறைமலைநகரில பஸ் மோதி பெட்ரோல் நிலைய பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2021-07-15 21:25 IST
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் பத்மா (வயது 44), இவர் மறைமலைநகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து ரெயில் மூலம் வீட்டுக்கு செல்வதற்காக மறைமலைநகர் நகராட்சி மைதானம் அருகே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்றார்.

சாவு

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் பத்மா மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்