மதுரை
விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள் விழா, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. தமுக்கம் மைதானம் அருகே உள்ள தமிழன்னை சிலை அருகில் உள்ள தியாகிகள் ஸ்தூபி அமைந்துள்ள இடத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதுபோல், பெத்தானியாபுரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்ததான முகாம் நடத்தினர். மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ரத்தத்தை சேகரித்தனர். வெங்கடேசன் எம்.பி. முகாமை தொடங்கி வைத்தார். அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கருத்துப்பலகையில் ஏராளமானோர் சங்கரய்யாவின் புகழைப் பதிவு செய்தனர். யானைக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளையாட்டுக் கழகத்தின் சிலம்பப் பயிற்சி மாணவர்கள் 100 பேர் சிலம்பம் சுற்றி சங்கரய்யாவிற்கு குருவணக்கம் செலுத்தினர்.