சென்னிமலை, கோபியில் கோவில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு

சென்னிமலை, கோபியில் உள்ள கோவில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது.;

Update:2021-07-16 04:48 IST
ஈரோடு
சென்னிமலை, கோபியில் உள்ள கோவில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது.
சென்னிமலை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று ஆனி திருமஞ்சன வழிபாடு சிறப்பாக நடந்தது. இதையொட்டி சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நடராஜருக்கு நேற்று ஆனி திருமஞ்சன வழிபாடு நடந்தது. 
இதையொட்டி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பச்சமலை
கோபிசெட்டிபாளையம் பச்சமலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சகஸ்ர நாமம் ஹோமம் நடைபெற்றது. காலையில் சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் பக்தர்கள் முக கவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
ஈஸ்வரன் கோவில்
கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர், சிவகாமி சாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோபி அருகே கூகலூரில் உள்ள மத்திய புரீஸ்வரர் உடனுறை மரகதவல்லி அம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி சிவகாமி நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதன்பின்பு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல் பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், கோபி அய்யப்பன் கோவிலில் உள்ள சிவகாமி சமேத நடராஜர் உள்ளிட்ட கோவில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் செய்திகள்