வீட்டின் கதவை உடைத்து 29 பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 29 பவுன் நகை திருட்டு;

Update:2021-07-18 01:09 IST
பேரையூர்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சலுப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 26). சம்பவத்தன்று லட்சுமி, சின்னக்கட்டளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் சலுப்பட்டிக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த இரண்டு பீரோவை உடைத்து அதில் இருந்த மொத்தம் 29 பவுன் நகைகள், கொடி கொலுசு, ஆகியவற்றையும் யாரோ மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதுகுறித்து லட்சுமி, சாப்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்