ஊருணியில் மூழ்கி தொழிலாளி சாவு

ஊருணியில் மூழ்கி தொழிலாளி சாவு;

Update:2021-07-19 00:42 IST
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த வெள்ளப்பாறைப்பட்டியில் வசித்து வந்தவர் மூர்த்தி (வயது 36). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலையில் அவரது நண்பருடன் வேடர்புளியங்குளத்தில் உள்ள ஊருணியில் குளிக்க சென்றார். இந்த நிலையில் ஷாம்புவாங்கி வருவதாக கூறி அவரது நண்பர் கடைக்கு சென்றுவிட்டார். ஷாம்பு வாங்கிவரும்வரை காத்திருக்காமல் ஊருணியில் இறங்கி மூர்த்தி குளித்து கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது அவர் ஆழமாக பகுதியில் சிக்கி கொண்டதால் நீரில் மூழ்கி மூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆஸ்டின் பட்டி போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்