காஞ்சீபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 46 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 46 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-07-20 00:35 GMT
காஞ்சீபுரம்,

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் படித்த பிளஸ்-2 மாணவர்களின் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில் 100 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய பட்டியலை வெளியிட்ட மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 12,991 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். காஞ்சீபுரத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 6 ஆயிரத்து 946 மாணவிகள் மற்றும் 6 ஆயிரத்து 45 மாணவர் உட்பட மொத்தம் 12 ஆயிரத்து 991 நபர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 65 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

இந்த நிலையில், காஞ்சீபுரத்தில் உள்ள 52 அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 45 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உட்பட மொத்தம் 102 பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய 12,991 பேரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு

இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், முதன்மைக் கல்வி அலுவலரின் உதவியாளர்கள் காந்திராஜன், ஜீவானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்பு தேர்வில் 108 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் 179 என மொத்தம் 287 பள்ளிகளில் மாணவர்கள் 15,450, மாணவிகள் 17,618 என மொத்தம் 33,068 பேர் தேர்வு எழுதினர். அதில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதய சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்