திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது. இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-21 21:06 GMT
தாளவாடி
கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு இரும்புத்துகள் பாரம் ஏற்றிக்கொண்டு நேற்று பகல் 11 மணியளவில் ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 21-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
லாரி டிரைவர் நீலகிரியை சேர்ந்த சங்கீதராஜ் (வயது 31) என்பவர் சிறு காயத்துடன் உயிர்தப்பினார். இதனால் கனரக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. 
இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பழுதடைந்த லாரி சாலையின் ஓரத்துக்கு இழுத்து வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து சுமார் 3 மணியளவில் போக்குவரத்து சீரானது.
லாரி பழுதானதால் தமிழக-கர்நாடக இடையே 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்