நிதி நிறுவன ஊழியரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்

நிதி நிறுவன ஊழியரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-07-23 03:25 IST
அலங்காநல்லூர்,

 பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 23). இவர் வாடிப்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பணம் வசூல் செய்வதற்காக அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி சென்றுள்ளார். அப்போது ஆலடி (60) மற்றும் அவரது மகன் மாதவன் ஆகிய இருவரும் சேர்ந்து பணம் கேட்டு வந்த சூர்யாவிடம் தகராறு செய்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து தந்தை-மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்