250 கிலோ குட்கா பறிமுதல்
250 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை,ஜூலை
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். இதில் அங்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 250 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் ஐராவதநல்லூர் வீரையன் நகரை சேர்ந்த சரவணக்குமார் (வயது 44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.