தாளவாடியில் இருந்து வரும் பலாப்பழங்கள் விற்பனை தீவிரம்
தாளவாடியில் இருந்து வரும் பலாப்பழங்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.;
பலாப்பழங்கள் என்றால் அனைவருக்கும் பண்ருட்டி நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு புகழ் பெற்றது. ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மற்றும் தாளவாடி பலாப்பழங்கள் பிரசித்தி பெற்றவை. ஆனால் எப்போதும் இவை கிடைப்பது இல்லை. இந்த நிலையில் தாளவாடி பலாப்பழங்கள் ஈரோடு சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றன.
இதுபற்றி தெரிந்த பொதுமக்கள் போட்டிப்போட்டு பழங்களை வாங்கிச்செல்கிறார்கள். இதுபற்றி பலாப்பழம் வியாபாரி கூறும்போது, தாளவாடி மலைப்பகுதியில் இருந்து தினசரி பலாப்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் விற்பனை செய்கிறோம். ஒரு பழம் 10 கிலோ எடை வரை இருக்கும் என்றார்.