மதுரை ராணுவ வீரரின் உடல் தகனம்

மதுரை ராணுவ வீரரின் உடல் தகனம்;

Update:2021-07-26 00:32 IST
மதுரை
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 36). ராணுவ வீரரான இவருக்கு திருமணமாகி சண்முகப்பிரியா(25) என்ற மனைவியும், ஹனிஸ்க் (7) மற்றும் பார்த்திவ் (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கதிர்வேல் அசாமில் பணியில் இருந்த போது, நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் வைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கதிர்வேலின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து நேற்று கீரைத்துறை மின்மயானத்தில் ராணுவ வீரர் கதிர்வேலின் உடல், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்