ஈரோட்டில் அம்மன் சிலை மீது ஏறி படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு

ஈரோட்டில் அம்மன் சிலை மீது ஏறி நாகப்பாம்பு படமெடுத்து ஆடியதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

Update: 2021-07-28 20:40 GMT
ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது. பின்னர் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது பாம்பு சுற்றிக்கொண்டு படம் எடுத்து ஆடியது. பிறகு மூலவர் சன்னதி அருகில் ஊர்ந்து சென்று அம்மனின் சிலையின் மீது மெதுவாக ஏறியது. அதன்பிறகு அம்மன் சிலையின் தலை பகுதியில் ஏறி படமெடுத்து ஆடியது. இதைப்பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இதையடுத்து பாம்பு பிடி இளைஞரான யுவராஜாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அங்கு விரைந்து சென்று பாம்பை லாவகமாக பிடித்தார். இந்த சம்பவத்தினால் கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்