வாலிபருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

வாலிபருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-07-30 01:23 IST
மதுரை, 
மதுரை உலகனேரி சங்கீதா நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (31). சம்பவத்தன்று இவர் மது போதையில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த வெங்கட்ராமனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியை காட்டி வெங்கட்ராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்