186 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
186 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
சோழவந்தான், ஆக
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அரசமரத்துப்பட்டி கிராமத்தில் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து கடை, கடையாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான தனிப் பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது இவரது வீட்டுக்கு பின்னால் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 186 கிலோ புகையிைல பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சங்கிலியை கைது செய்த போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.