விபசாரம்; புரோக்கர்கள் 2 பேர் சிக்கினர்
விபசாரம் தொடர்பாக புரோக்கர்கள் 2 பேர் சிக்கினர்;
மதுரை,ஆக
மதுரை பெத்தானியாபுரத்தில் வீட்டை வாடகைக்கு பிடித்து விபசாரம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கரிமேடு போலீசார் அந்த வீட்டை கண்காணித்த போது அங்கு விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் செல்லூர் கீழவைத்தியநாதபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து(வயது 35), உசிலம்பட்டியை சேர்ந்த சதீஷ்(36) என்பதும், அவர்கள் விபசார புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 23 வயது பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.