முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ஈரோட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2021-08-05 06:08 IST
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில், கிருமிநாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல், வீதிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள், ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மற்றும் கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்