குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது செய்தனர்.;

Update:2021-08-07 10:01 IST
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் அறிவுறுத்தியதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான கோவிந்தவாடி அகரத்தை சேர்ந்த புருஷோத்தமன் (28), சுதாகர் (25), தட்சிணாமூர்த்தி (29), ஊவேரிச்சத்திரத்தை சேர்ந்த மதிவாணன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் காஞ்சீபுரம் மேல்சிறுணை கிராமம், குளக்கரை தெருவை சேர்ந்த காந்தி என்ற டேவிட் (வயது 26) என்பவரை பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்