கோபி அருகே பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

கோபி அருகே பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

Update: 2021-08-07 20:57 GMT
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் பல்வேறு உழவர் பயிற்சி முறைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் பயிற்சி கோபி அருகே உள்ள பெருந்தலையூர் கிராமத்தில் அங்கக முறையில் நடத்தப்பட்டது.
பயிற்சி முகாமுக்கு கோபி வேளாண்மை உதவி இயக்குனர் வே.ஜீவதயாளன் தலைமை தாங்கினார். மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தின் வல்லுனர் பச்சையப்பன் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது மற்றும் பஞ்சகவ்யா, பண்ணைக் கழிவு, கழிவுசிதைப்பான், மீன் அமிலம் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்து விளக்கி பேசினார்.
கோபி வட்டார வேளாண்மை அலுவலர்கள் சிவப்பிரகாஷ், சந்திரசேகரன் ஆகியோர் வேளாண் திட்டங்கள் பற்றி பேசினார்கள். முன்னோடி விவசாயிகள் தங்களது பாரம்பரிய நெல் சாகுபடி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பயிற்சி முகாமில் உழவர் விவாதக் குழு அமைப்பினர், உழவர் சங்க பிரதிநிதிகள், உழவர் உற்பத்தியாளர் குழுவினர், பெருந்தலையூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 
பயிற்சிக்கான ஏற்பாடுகளை கூகலூர் உதவி வேளாண்மை அலுவலர் குமார்  மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் கருணாம்பிகை, மீரா, விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
---

மேலும் செய்திகள்