வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

Update: 2021-08-08 05:44 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி ஏரிக்கரையில் அந்த பகுதியை சேர்ந்த மலர் (40) என்பவர் மாடு மேய்த்துவிட்டு வேப்பமரத்தடியில் அமர்ந்துகொண்டிருந்தார்் அப்போது மர்ம நபர் ஒருவர் மலரின் கழுத்து மற்றும் வாயை அழுத்தி பிடித்ததில் அவர் மயக்கம் அடைந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துச் கொண்டு மர்ம நபர் தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து மலரின் மகன் வினோத்குமார் பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் முசரவாக்கம், ரேணுகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்த சீராளன் (வயது 39) என்பவர் மலரின் தங்க நகைகளை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையொட்டி தனிப்படை போலீசார் சீராளனை கைது செய்து அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

இந்த வழக்கில் சிறப்பாகவும் புலன் விசாரணை மேற்கொண்டு மற்றும் விரைவாகவும் செயல்பட்டு வழிப்பறி வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ய உதவிய பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சோமசுந்தரம் மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் அவரது குழுவினரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார்.

மேலும் செய்திகள்