ஜல்லிக்கட்டு நடத்திய 5 பேர் கைது

ஜல்லிக்கட்டு நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-08-10 01:25 IST
மதுரை,ஆக.
மதுரை உத்தங்குடி பாண்டி கோவில் தெரு கண்மாய் பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறி இளைஞர்கள் சிலர் ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளனர். இது குறித்து மாட்டுத்தாவணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விதிமுறைகளை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த கணபதி, அஜய்குமார், முருகன், சையது உமர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து, 3 காளைகள் மற்றும் காளைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்