கீழே தவறி விழுந்து கிளீனர் பலி
மதுரையில் கீழே தவறி விழுந்து கிளீனர் பலியானார்.;
மதுரை,ஆக.
மதுரை டி.வி.எஸ். நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). லாரியில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவர் சிந்தாமணி ரோட்டில் உள்ள அரிசி ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கண்ணனின் மனைவி அன்னபூரணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.