அல்லிக்குண்டம் மலையில் தீ

மின்னல் தாக்கியதில் அல்லிக்குண்டம் மலையில் தீப்பிடித்தது.;

Update:2021-08-10 01:45 IST
உசிலம்பட்டி,ஆக
உசிலம்பட்டி அருகே உள்ளது அல்லிகுண்டம். இந்த ஊரின் அருகில் உள்ள மலைப் பகுதியில் நேற்று மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மலையில் திடீரென்று தீப்பிடித்தது. தொடர்ந்து மழை பெய்ததால் அந்த தீ மேலும் பரவாமல் அணைந்தது. இதனால் அந்த மலையில் உள்ள மரங்கள் தீயில் இருந்து தப்பின.
இந்த நிலையில் சேடப்பட்டி அருகே உள்ள சின்னக்கட்டளையை சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பவர் தனது தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில்  படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் செய்திகள்