கோபி அருகே குதிரையை திருடியவர் மீது வழக்கு

கோபி அருகே குதிரையை திருடியவர் மீது வழக்கு;

Update:2021-08-10 05:00 IST
கடத்தூர்
கோபி அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 30). விவசாயியான இவர் கால்நடைகள் மற்றும் குதிரைகள் வளர்த்து வருகிறார். இவற்றை அவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் சவுந்தர்ராஜன் நேற்று முன்தினம் தனது குதிரைகளை பார்த்தபோது அதில் ஒரு குதிரையைக் காணவில்லை. உடனே அவர் அக்கம்பக்கத்தில் சென்று தேடி பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது குதிரையை பிடித்து சென்று கொண்டிருந்தார்.
இதனால் அவரிடம் குதிரையை விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் கத்தியை காட்டி சவுந்தர்ராஜனை மிரட்டிவிட்டு குதிரையை விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
இதுகுறித்து சவுந்தர்ராஜன் கோபி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் 35 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்