கோபி அருகே விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை
கோபி அருகே விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.;
கடத்தூர்
கோபி அருகே விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கர்ப்பிணி
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் கமல் பிரசாத். விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வநாயகி (வயது24) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. செல்வநாயகி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் கமல்பிரசாத்துக்கும், செல்வநாயகிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்வநாயகி மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.
தற்கொலை
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்துவிட்டு செல்வநாயகி மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வநாயகி இறந்தார்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். செல்வநாயகிக்கு திருமணம் நடந்து ஒரு ஆண்டே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.