வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து நகை, செல்போனை திருடிய ஆசாமிகள்
திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து 8¾ பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போனை 2 மர்ம மனிதர்கள் திருடி விட்டு சென்றுவிட்டனர்.;
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 43). இவர் கடந்த ஆடிப்பெருக்கு அன்று புதியதாக 8¾ பவுன் நகை, விலை உயர்ந்த ஒரு செல்போன் வாங்கி உள்ளார். பின்னர் அதை வீட்டு பூைஜ அறையில் சாமி படத்திற்கு முன்பு வைத்து உள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து பூஜை அறையில் இருந்த 8¾ பவுன் நகை மற்றும் செல்போனை திருடினர். அப்போது வீட்டிற்குள் சத்தம் கேட்டு செல்லப்பாண்டி சுதாரித்து எழுந்தார். இதற்குள் ஒருவர் பின் ஒருவராக 2 நபரும் அங்கிருந்து திருடிய நகை, செல்போனுடன் ஓட்டம் பிடித்தனர்.
இதனையடுத்து செல்லப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் திருடன், திருடன் என சத்தம் போட்டுக்கொண்டு அவர்களை விரட்டினர்.ஆனால் அவர்கள் தப்பித்து தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் செல்லப்பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து 8¾ பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போனை 2 மர்ம மனிதர்கள் திருடி விட்டு சென்றுவிட்டனர்.
பூஜைக்கு வைத்திருந்தார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் காற்றோட்டத்திற்காக வீட்டில் கதவை திறந்து வைத்து செல்லப்பாண்டி வராண்டாவில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இதேசமயம் அவரது மனைவியும் மற்றும் குழந்தைகள் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நகை திருட்டு