விபத்தில் மூதாட்டி பலி

உசிலம்பட்டி அருகே விபத்தில் மூதாட்டி பலியானார்.;

Update:2021-08-12 02:47 IST
உசிலம்பட்டி,

 உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி காலனியை சேர்ந்தவர் அழகர். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 65). இவர் உசிலம்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் நடுப்பட்டி விலக்கு அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பொன்னம்மாள் இறந்தார்.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் முசுவனூத்து முத்துகாமன்பட்டியை சேர்ந்த வீரணன்(37) கீழே விழுந்து காயம் அடைந்தார். இது குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்