ரூ.17 லட்சம் மோசடி; 2 பேர் கைது

ரூ.17 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-08-13 02:24 IST
மதுரை,

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சையதுஇப்ராகிம் (வயது 48). இவரிடம் மேலஅனுப்பானடியை சேர்ந்த தங்கவேல் (62), ஜெய்கணேஷ் (30) ஆகியோர் தாங்கள் செய்யும் தொழிலில் பணம் மூதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக தெரிவித்தனர்.
அவர்களின் ஆசை வார்த்தையை கேட்டு சையதுஇப்ராகிம் அவர்களிடம் ரூ.17 லட்சம் கொடுத்தார். அதற்கு அவர்கள் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கொடுத்து விட்டு அதன்பின்னர் எந்த பணமும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பணத்தை கேட்ட போது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சையது இப்ராகிம் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேல், ஜெய்கணேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்