வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

மதுரையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-08-14 02:56 IST
மதுரை,

மதுரை பொன்மேனி சிவசக்தி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 31). இவருக்கும் மாடக்குளத்தை சேர்ந்த அருண்குமார் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று சிவக்குமார் வீட்டின் முன்பு அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் அருண்குமாரை எதிர்தரப்பினர் தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கினார்கள். இது குறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், கருணாமூர்த்தி (22), சந்தோஷ் (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்