புதிய நகை வாங்கி தரக்கேட்ட மனைவி மீது கொதிக்கும்பாலை ஊற்றிய எலக்ட்ரீசியன்

புதிய நகை வாங்கித் தரக்கேட்ட கேட்ட மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-08-14 03:05 IST
வாடிப்பட்டி,

புதிய நகை வாங்கித் தரக்கேட்ட கேட்ட மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.

புதிய நகை கேட்டார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யனகவுண்டன்பட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). எலக்ட்ரீசியன். இவருக்கு ஜெயபிரதா (27) என்ற மனைவியும், அபிநத்தன் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் ஜெயபிரதா தனக்கு திருமணம் முடிந்ததில் இருந்து கணவர் அருண்குமாரிடம் புதிதாக நகை வாங்கி தரும்படி கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அருண்குமாரும் நகை வாங்கி தருவதாக கூறி நாட்களை கடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஜெயபிரதா தனது குழந்தைக்கு அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது கணவர் அருண்குமாரிடம் வழக்கம் போல் புதிதாக நகை வாங்கி தரும்படி தகராறு செய்துள்ளார்.

கொதிக்கும் பாலை ஊற்றினார்

 அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார் அடுப்பில் கொதித்த பாலை எடுத்து ஜெயபிரதா மீது ஊற்றினார். இதில் உடல் ெவந்து ஜெயப்பிரதா அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து ஜெயபிரதா கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் வழக்குபதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்