மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2021-08-15 00:54 IST
பேரையூர்,

 நாகையாபுரம் போலீசார், திருட்டு மணல் தடுப்பு சம்பந்தமாக அப்பக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்தது. போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தியபோது அ.தொட்டியபட்டியைச் சேர்ந்த மார்நாடு என்பவர் தப்பி ஓடி விட்டார்.
 லாரியில் இருந்த அருண்குமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் டிப்பர் லாரியை மணலுடன் பறிமுதல் செய்து நாகையாபுரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மார்நாடு என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்