செல்போன் திருடிய 2 பேர் சிக்கினர்

மதுரையில் செல்போன் திருடிய 2 பேர் சிக்கினர்.;

Update:2021-08-16 02:17 IST
மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர் ராமலிங்கம். சம்பவத்தன்று இவரது செல்போனை மார்க்கெட்டிற்கு வந்த 2 பேர் திருடி செல்வதை பார்த்து விட்டார். உடனே அவர்களை அங்கிருந்தவர்களுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அரும்பனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த விஜித் (வயது 24), கடச்சனேந்தல் செல்வராஜ் (40) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்