கஞ்சா விற்ற பெண்கள் கைது

கஞ்சா விற்ற பெண்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-08-17 01:50 IST
திருமங்கலம், 
உசிலம்பட்டி அருகே உள்ள பெரிய கட்டளையை சேர்ந்தவர் பூமா என்ற பூவம்மாள் (வயது 55). உசிலம்பட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர்கள் 2 பேரும் கட்டதேவன்பட்டி விலக்கு அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக சிந்துபட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து  விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்